Ads

கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை…

தலைப்பை படித்த உடன் நம்ப முடியவில்லை அல்லவா?
இது உண்மைதான்; நம்புங்கள்.
ஆம்! கேன்சர் என்னும் புற்றுநோய் அரக்கனுக்கு மருந்தாகிறது எலுமிச்சை.
உலகம் முழுவதும் கேன்சருக்கு பலியாவோர் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல. இந்த கொடிய வியாதியை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போதுள்ள மருத்துவ முறைகளில் ஆரம்ப கட்டத்தில் நோயை கண்டுபிடித்துவிட்டால் மட்டுமே குணப்படுத்த முடியும். மற்றபடி நோய் பாதிப்பை தடுத்து வாழ்நாளை அதிகரிக்க மட்டுமே முடியும் என்ற நிலை உள்ளது.
உலக மருத்துவ விஞ்ஞானிகள் புற்று நோயை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த செய்தியின் துவக்கத்தில் சொல்லப்பட்ட தகவல்.
அமெரிக்காவின் பால்டிமோரில் செயல்பட்டு வரும் ஒரு சுகாதார அமைப்பு தான் இந்த பெருமைக்குரிய கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர்கள். தற்போது இந்த வியாதிக்கு உள்ள சிகிச்சைகளில் முக்கியமானது கீமோ தெரபி.
இந்த கீமோ தெரப்பியின் பக்க விளைவுகளையும் தாங்க முடியாத வேதனைகளையும் சொல்ல வேண்டியதில்லை. இதற்கொரு வரப்பிரசாதமாக வந்துள்ளது தான் எலுமிச்சை.
உடலில் நல்ல செல்களுக்கு எந்த விதமான ஆபத்தையும் ஏற்படுத்தாமல், ஆபத்தான செல்கள் மற்றும் கேன்சராக மாறிவிடக்கூடிய கட்டிகளை மட்டுமே அழிக்கும் அபரிமிதமான ஆற்றல் பெற்றது எலுமிச்சை என்கிறது இந்த ஆராய்ச்சி.
கீமோ தெரப்பியைவிட 10 ஆயிரம் மடங்கு ஆற்றல் கொண்டது இந்த எலுமிச்சை என்பது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள ஆச்சரியமான உண்மை.
அதுமட்டுமா?
ஆபத்தான பாக்டீரியாக்கள், கிருமிகள் மற்றும் காளான்களையும் ஒரு கை பார்க்காமல் விடுவதில்லையாம் இந்த எலுமிச்சை.
இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவது, மன அழுத்தங்களை கட்டுப்படுத்துவது, நரம்பு கோளாறுகளை சரி செய்வது என்று எலுமிச்சையின் மகிமை…. பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
மார்பகம், ப்ராஸ்டேட், கல்லீரல் மற்றும் கணையம் என்று கேன்சர் எங்கிருந்தாலும் அவற்றை அழிக்கும் பணியை சிறப்பாக செய்ய முடியுமாம் எலுமிச்சையால். இத்தகைய சிறப்பு வாய்ந்த எலுமிச்சையின் மருத்துவ குணத்தை பயன்படுத்தி புற்று நோயை அழிக்கும் மருந்துகளை உருவாக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த அரிய கண்டுபிடிப்பு மருத்துவ ரீதியாக வெளி வந்தால் புற்று நோய்க்கு சிக்கனமான, முற்றிலுமான தீர்வாக இருக்கும். 

பதிவு செய்தது ErodeTimes on 6/23/2011 07:58:00 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0
Sakthivel

0 கருத்துகள் for கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை…

உங்கள் கருத்துரைகளை விட்டுச் செல்லுங்கள்


FLICKR PHOTO STREAM

2010 Erodetimes.in. All Rights Reserved. - Powered by w2h