Ads

அழகர் சாமியின் குதிரை








சிறப்பம்சங்கள் :
1)அச்சு அசலாய் ஒருகிராமத்தை கண்முன் நிறுத்தி இருக்கிறார் இயக்குனர்...பேருதவியாக ஒளிப்பதிவாளர்...உறுத்தாத இசையமைப்பாளர் ...படம் பார்க்கிறோம் என்ற நினைப்பே வராமல் ..இயல்பாய் நம்மைத் தோளில் கைபோட்டு அழைத்துச் செல்லும் வசன கர்த்தா........

2)பாத்திரமாகவே மாறிப்போன தாநாயகன் அழகர்சாமி , இன்ஸ்பெக்ட்டர், முற்போக்குப் பெரியம்மா

3) மிக முக்கியமாக குதிரைக்காக கதாநாயகன் போடும் சண்டை ... ஓடிப்போய் அவனுக்கு உதவவேண்டும் என்னும் அளவுக்கு இயல்பானது

4) அங்கங்கே வரும் இயல்பான பாத்திரங்கள் ( செவிடாக நடிக்கும் கிழவி, சர்பத்துக்கு காசு கேக்கும் பையனை அடிக்கும் அப்பா, ஊர்ப் பெரிசுகள் ,பரோட்டா சூரி )

5) கலக்கல் நகைச்சுவைக் குத்தல்கள்

6)கதா நாயகன் பெண்பார்க்கும் இடம்..மிக அழகானபெண் என்பதால் வேண்டாம் எனறு மறுக்க...பெண்ணோ மனதுமட்டும் போதுமானது எனச் சம்மதிக்கும் இடம் ....

7)கையைத் தொட்டுப் பார்க்கலாமா என்று கேட்டுவிட்டு தொடும் இடம் ...கவிதை :)

8) குழந்தைத் தோழிலாளர்கள் / கிராமங்களின் பொருளாதார அவல நிலையை காட்டும் இடம்

9) மூட நம்பிக்கையை கிண்டல்செய்யும் தொணி / பாணி

10) மலையக மக்கள் வாழுமிடத்தை/ போக்குவரத்து நிலையை உள்ளதை உள்ளதுபோல காட்டி இருப்பது

சறுக்கல்கள் :
1) அந்த மைனர் ....கிராமத்தின் மேலுள்ள மதிப்பை எல்லாம் மொத்தமாய்ப் போட்டு கொளுத்தும் பாத்திர வடிவமைப்பு ... நகைச்சுவைக்காகத்தான் என்று எடுக்கவே முடியாது .... பொது இடத்தில் எதிரில் உள்ள (திருமணமான) பெண்களை கண்சாடையிலேயே பேசி தனியாக அழைத்துச் சென்று விடுவாராம் ....பெண்களும் அவனுக்கு வழிகாட்டி முன்னே செல்வார்களாம் ....மிகக் கேவலப் படுத்தி இருக்கிறார்கள் ...

2) மலையாள மாந்தரீகர் ...இந்தப் பாத்திரம் தவிர்த்திருக்கப் பட வேண்டிய ஒன்று .... நம்ம ஊர் ப்ராடாகவே காட்டி இருக்கலாம் . வேறு மொழி பேசுபவர்களை ஏமாற்றுக்க்காரராகக் காட்டுவது இனவேற்றுமையையே வளர்க்கும் ... ( நம்மை அவர்கள் 'பாண்டி' என்று சொல்வதை எதிர்க்கும் நடு நிலையாளர்கள் ..இதையும் எதிர்க்க வேண்டும் ... யார் முதலில் நிறுத்துவது என்பதுதான் இப்போதைய கேள்வி... அது நாமாகவே இருப்போமே ).

3) பல இடங்களில் இடறும் லாஜிக் ( அவ்ளோ பெரிய மரக்குதிரையை தனியாளாக ஆசாரி இருமுறை யாருக்கும் தெரியாமல் இரவு மாற்றுவது ....குதிரைக்கு திடீரென வீரம் வருவது ....கடைசியில் குதிரையை கிராமத்து மக்கள் கண்டுகொள்ளாமல் விடுவது ...)

4) அந்த வில்லன்...தெளிவில்லா பாத்திர அமைப்பு ..(ஊர்மக்கள் நடுவி வைத்து குதிரைக்கு விசம் கொடுத்தா மாட்டிக்குவோமுன்னு கூடவாத் தெரியாது?)

5) சாதி எதிர்ப்பை உயர்த்திப் பிடிக்க நினைத்து , மூட நம்பிக்கைக்கு சல்யூட் அடித்திருக்கும் க்ளைமாக்ஸ் (திருவிழா முடிந்தவுடன் போலிச் சாமியார் சொன்னது போலவே வரும் மழை)

பொதுவாக : சில குறைகளைத் தவிர்த்து ..பல பரிமாணங்களை சிறப்பாகப் பதிந்துள்ள நல்லதோர் படம்

பதிவு செய்தது ErodeTimes on 6/23/2011 07:44:00 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0
Sakthivel

0 கருத்துகள் for அழகர் சாமியின் குதிரை

உங்கள் கருத்துரைகளை விட்டுச் செல்லுங்கள்


FLICKR PHOTO STREAM

2010 Erodetimes.in. All Rights Reserved. - Powered by w2h