Ads

12ம் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார் ஒரிசா அமைச்சர்

ஒரிசாவில் அம்மாநில அமைச்சர் ஒருவர் ஓரே ஆண்டில் 10-ம் மற்றும் 12-ம் வகுப்புக்கான தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்று்ளார். ஓடிசாவில்,பழங்குடியினர் மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருப்பவர் ரமேஷ்சந்திரா மஜ்கி (33) இவர் கடந்த1990- 1995-ம் ஆண்டுகளில் தனது தந்தை ஜாதவ் மஜ்கி ,தொழி்ற்துறை அமைச்சராக இருந்த போது இவர் நவராங்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் படித்து கொண்டிருந்தார். இப்பள்ளியில் நடத்தப்பட்ட 10-ம் மற்றும் 12-ம் வகுப்புதேர்வுஎழுதினார். இதி்ல் அவருக்கு தோல்வி ஏற்பட்டது. இந்நிலையில் அவரது தந்தை ஜாதவ் மஜ்கி இறந்ததும் படிப்பை நிறுத்திவிட்டு தந்தையைப்போல தீவிர அரசியலில் நுழைந்தார். படிப்படியாக அரசியல் செல்வாக்கு பெற்று. கடந்த 2004-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நவராங்பூர் தொகுதியில் போட்டியி்ட்டு வெற்றி பெற்றார். பின்னர் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று , முதல்வர் நவீன்பட்நாயக் அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். எனினும் இவருக்கு எப்படியேனும் 12-ம் வகுப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் குறையவில்லலை. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தின் அரசுத்தேர்வுகள் கடந்த 12-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 10-ம் வகுப்பிற்கும், 12-ம் வகுப்பிற்கு நடந்தது. இதில் அமைச்சர் ரமேஷ்சந்திர மஜ்கி , தனது சொந்த மாவட்டமான நவரங்பூராவில் உள்ள பானபீடா மகாவித்யாலயா ‌பள்ளியில் இவருக்கு தேர்வு எழுத ஹால்டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. தனி அறை ஒதுக்கப்பட்டு தேர்வு எழுதினார். நேற்று தேர்வு முடிகள் வெளியாயின. இதில் அமைச்சர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்நது அவருக்கு சக அமைச்சர்கள், உறவினர்கள் பாராட்டு தெரிவித்தனர். இது குறித்து அமைச்சர் கூறுகையில், தேர்வில் வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடநது கொண்டிருந்த நேரத்தில் தேர்வு தேதி ‌அறிவிக்கப்பட்டதால் சிரமம் பார்க்காமல் தேர்வு எழுதினேன். மேற்கொண்டு பட்டப்படிப்பு படிக்க இருப்பதாக தெரிவித்தார்.

பதிவு செய்தது ErodeTimes on 5/31/2011 09:48:00 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0
Sakthivel

0 கருத்துகள் for 12ம் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார் ஒரிசா அமைச்சர்

உங்கள் கருத்துரைகளை விட்டுச் செல்லுங்கள்


FLICKR PHOTO STREAM

2010 Erodetimes.in. All Rights Reserved. - Powered by w2h