Ads

இங்கிலாந்து ராணி கிரீடம் சின்னத்துடன் முத்திரை ஈரோடு ஆர்.டி.ஓ., ஆஃபீஸில் புழக்கம்

இங்கிலாந்து ராணி கிரீடம் சின்னம் பொறிக்கப்பட்ட முத்திரை கட்டை புழக்கத்தில் இருந்து வருகிறது.

ஆங்கிலேயர் ஆட்சியில் தபால் துறை, ரயில்வேதுறை, நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை என அனைத்து துறைகளும் அறிமுகம் செய்யப்பட்டு செயல்பட்டது. இவர்களின் காலத்தில், வருவாய்த் துறையில் முத்திரை கட்டைகளின் மூலம் சீல் வைக்கும் வழக்கம் அறிமுகம் செய்யப்பட்டது.

சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும், பெரும்பாலான அரசுத்துறை அலுவலகங்கள் ஆங்கிலேயர் கால கட்டித்தில் இயங்கிவருகிறது. ஆங்கிலேயர் பயன்படுத்திய முத்திரையில், இங்கிலாந்து ராணியின் கிரீடம் சின்னமும், ஆர்.சி., என்ற ஆங்கில எழுத்தும், சிலுவை சின்னமும் இடம்பெற்றிருக்கும். இந்த முத்திரைக் கட்டை, இன்றும் ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பயன்படுத்தப்படுகிறது. தரமான மரத்தால் ஆன, பித்தளையில் முத்திரை கொண்ட இந்த கட்டை இவ்வளவு காலமும், புதிதாக உள்ளது.
ஆட்சி மாறினாலே, பழைய திட்டங்களை தூக்கி எறியும் இந்தக் காலத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்திய முத்திரை கட்டையை பத்திரமாக பாதுகாத்து, இன்று வரை பயன்படுத்தி வருவது ஆச்சர்யம் தருகிறது.
இதுபற்றி ஆர்.டி.ஓ., சுகுமார் கூறுகையில்,
இங்கிலாந்து ராணி கிரீடம் பொறித்த முத்திரை கட்டை ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு சொந்தமானது. இந்த முத்திரை கட்டையை நீண்ட காலமாக வைத்து பயன்படுத்தி வருகிறோம். ஆங்கிலேயர் கால கட்டிடத்தை போலவே, எங்கள் அலுவலக கட்டிடமும் அமைந்துள்ளது. தூண்கள் அனைத்தும் அவர்களது காலத்தை நினைவு படுத்தும் வகையிலேயே உள்ளன. ஆங்கிலேயர் காலப் பொருளை 60 ஆண்டு காலத்துக்கு மேல் பாதுகாத்து வைத்து, இன்றும் பயன்படுத்துவது பெருமைக்குறிய விஷயம். இந்த முத்திரைக்கான வரலாறு பற்றி, இங்கு உள்ளவர்கள் யாருக்கும் தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

பதிவு செய்தது ErodeTimes on 5/31/2011 04:29:00 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0
Sakthivel

0 கருத்துகள் for இங்கிலாந்து ராணி கிரீடம் சின்னத்துடன் முத்திரை ஈரோடு ஆர்.டி.ஓ., ஆஃபீஸில் புழக்கம்

உங்கள் கருத்துரைகளை விட்டுச் செல்லுங்கள்


FLICKR PHOTO STREAM

2010 Erodetimes.in. All Rights Reserved. - Powered by w2h