Ads

வங்கி கடனை திரும்ப செலுத்தாமல் இழுத்தடிப்பு நகைக்கடைக்கு சீல் சீட்டு போட்டவர்கள் கவலை

கோபிசெட்டிபாளையம்: வங்கியில் கடன் வாங்கி கடனை திருப்பி செலுத்தாததால், கோபி சத்தி ரோட்டில் உள்ள அன்பு தங்கமாளிகை கடைக்கு வங்கி அதிகாரிகள் சீல் வைத்தனர். கோபி சத்தி சாலையில் அன்பு தங்கமாளிகை என்ற ஜூவல்லரி கடை உள்ளது. இக்கடை உரிமையாளர் பொன்சிவசாமி, நம்பியூர் பாங்க் ஆப் பரோடாவில் பல கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளார். இதுவரை கடனை திருப்பி செலுத்ததால், வங்கி அதிகாரிகள் ஈரோடு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஜூவல்லரி கடைக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி ஜூவல்லரி கடைக்கு சீல் வைக்க வங்கி அதிகாரிகள் முடிவு செய்தனர்.

நேற்று கடைக்கு முன் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜூவல்லரி முன் திடீரென போலீஸார் குவிந்ததால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. கடைக்கு சீல் வைக்கப்பட உள்ளது என அறிந்ததும், அக்கடையில் மாத சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்திருந்த மக்கள் குவிந்தனர்.

பேங்க் ஆப் பரோடா வங்கி அதிகாரிகள், அன்பு தங்கமாளிகை கடைக்கு சீல் வைத்தனர். வங்கி அதிகாரிகள் கூறுகையில், ""வங்கியின் செயல்பாட்டின்படி, இதுபற்றி நாங்கள் தகவல் தெரிவிக்க முடியாது,'' என்றனர்.
சிறுசேமிப்பு செய்த மொடச்சூர் கணேசன் கூறுகையில், ""நான் மாத, மாதம் இக்கடையில் நகைக்கான பணம் சேர்த்து வருகிறேன். 8,000 ரூபாய் சேர்த்து நகைக்கு ஆர்டர் கொடுத்தேன். மே 28ல் நகையை வாங்கிச் செல்லுமாறு கடைக்காரர்கள் தெரிவித்தனர். இங்கு வந்து பார்த்தால் கடைக்கு சீல் வைக்கப்படுகிறது. என்னை போல் 2,000 பேர் வரை நகை சீட் சேர்ந்திருப்பார்கள்,'' என்றார்.
கள்ளிபட்டி தேவராஜ் கூறுகையில், ""கடந்த ஐந்தாண்டுகளாக நகை சீட் சேர்ந்துள்ளேன். நடப்பாண்டு 13 ஆயிரம் ரூபாய் வரை சேர்த்துள்ளேன். திடீரென கடைக்கு ஷீல் வைத்தது அதிர்ச்சியாக உள்ளது,'' என்றார்.
மிகவும் பிரபலமாக இருந்த அன்பு தங்கமாளிகை கடனால் சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது

பதிவு செய்தது ErodeTimes on 5/30/2011 12:24:00 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0
Sakthivel

0 கருத்துகள் for வங்கி கடனை திரும்ப செலுத்தாமல் இழுத்தடிப்பு நகைக்கடைக்கு சீல் சீட்டு போட்டவர்கள் கவலை

உங்கள் கருத்துரைகளை விட்டுச் செல்லுங்கள்


FLICKR PHOTO STREAM

2010 Erodetimes.in. All Rights Reserved. - Powered by w2h