Ads

அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில்

காவிரி கரை ஓரத்தில் இருக்கும் ஸ்தலம்..பிரம்மா,விஸ்ணு,சிவன் மூவரும் இருக்கும் ஸ்தலம்..அகத்தியர் ,சிவபெருமான் பார்வதி திருமணத்தை தரிசனம் செய்த ஸ்தலம் என்பார்கள்..பிரம்மாவுக்கு சிறப்பான சன்னதி அமையப்பெற்ற ஒரே ஸ்தலம்..அதனால்தான் திங்கள் கிழமை தோறும் 5000 கர்நாடகா பக்தர்கள் பிரம்மாவை வணங்கி செல்கின்றனர்...கர்ம வினை தீர்க்கும் ஸ்தலம்..சனி பகவான் சிவனை பார்த்தபடி அமர்ந்துள்ளார்..சிவன் சுடுகாட்டை பார்த்தபடி அமர்ந்துள்ளார்..காசிக்கு அடுத்து சுடுகாட்டை பார்த்தபடி இருக்கும் ஒரே ஸ்தலம்...

காவிரி இடமிருந்து வலமாக தன் போக்கை மாற்றிக்கொள்ளும் இடம்..சனி தன் வாகனத்தில் அமர்ந்த கோலம்...அதாவது காக்கை மேல் அமர்ந்திருப்பார்..காக்கை மீது அமர்ந்திருக்கும் சனிபகவான் வேறு எங்கும் இல்லை...சனி வாகனத்தில் அமர்ந்திருப்பதால்,சனிக்குண்டான தொழில் வாகனம் என்பதால் வாகன தொழில் செய்பவர்கள் இங்கு வந்து வழிபட சிறப்பு உண்டாகும்..அடிக்கடி விபத்தை சந்திப்பவர்களும் இங்கு வந்து வழிபட்டால் தோசம் நீங்கும்...கோயில் மிக பெரிதாக இருக்கிறது...பெருமாள் .,ஸ்ரீரெங்கம் பெருமாள் கோலத்தில் அருள் பாலிக்கிறார்..
.
ஒவ்வொரு தனி சன்னதியும் பெரிய அளவில் தாரளமாக இருக்கும்..தினசரி சுற்றுலா பயணிகள் வருகை இருந்துகொண்டே இருக்கும்...சிவன் சிறிய மலை முகடு போல தோன்றுகிறார்...காரணம் இமயமலையிலிருந்து சிதறிய ஒரு துண்டு தான் இத்தலத்து இறைவன் என்கிறார்கள்....

பதிவு செய்தது ErodeTimes on 5/30/2011 11:03:00 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0
Sakthivel

0 கருத்துகள் for அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில்

உங்கள் கருத்துரைகளை விட்டுச் செல்லுங்கள்


FLICKR PHOTO STREAM

2010 Erodetimes.in. All Rights Reserved. - Powered by w2h