ஜூன் 15ம் தேதி, முழு சந்திர கிரகணம், இந்தியாவில் தெரியும்
india, sciencenews 5/31/2011 09:57:00 AM
இந்தியாவில், ஜூன் 15ம் தேதி, முழு சந்திர கிரகணம் தெரியும் என, தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து, மையத்தின் நிர்வாக இயக்குனர் இளையபெருமாள் கூறுகையில், "ஜூன் 15ம் தேதி, முழு சந்திர கிரகணம், இந்தியாவில் தெரியும். அதை வெறும் கண்களாலேயே பார்க்க முடியும். இந்தியா தவிர, தெற்காசியா, ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளிலும் இந்த கிரகணம் தெரியும். வரும் ஜூன் 2ம் தேதி நிகழும் சூரிய கிரகணம், இந்தியாவில் தெரியாது,'' என்றார்.





