Ads

வரி ஏய்ப்போர் பெயர் வெளியிடப்படும்?ஆலோசனை அளிக்க புதிய குழு

வரி செலுத்தாமல் ஏய்ப்போரை கண்டுபிடிக்கவும், அவர்களை பற்றிய விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கவும், அவர்களிடமிருந்து வரி பாக்கிகளை வசூலிக்கவும், தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக, புதிதாக ஒரு குழுவை மத்திய நிதியமைச்சகம் நியமித்துள்ளது. வரி ஏய்ப்போர் பெயரை பகிரங்கமாக வெளிப்படுத்தவும் இக்குழு அரசுக்கு ஆலோசனை கூறும்."கறுப்புப் பண அபாயத்தை ஒழிக்க, மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை' என, சமூக பிரதிநிதிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த கறுப்புப் பண பிரச்னை தொடர்பாகவும், ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திய யோகா குரு பாபா ராம்தேவ் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டில்லி ராஜ்காட்டில் சமூக சேவகர் அன்னா ஹசாரே நேற்று உண்ணாவிரதம் இருந்தார்.இந்த சூழ்நிலையில், கறுப்புப் பண பிரச்னையை கையாள்வதற்காக மற்றொரு குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.கறுப்புப் பணத்தை பறிமுதல் செய்யவும், அதை தேசிய சொத்தாக அறிவிக்கவும் தேவையான சட்ட வரையறைகளை உருவாக்குவதற்காக, கடந்த மாதம் உயர்மட்டக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.இந்நிலையில், மீண்டும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை டைரக்டர் ஜெனரல் (நிர்வாகம்) அனிதா கபூர் தலைமையிலான இந்தக் குழு, வரி ஏய்ப்போரை கண்டுபிடிப்பது, அவர்களை பற்றிய விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிப்பது, அவர்கள் செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை வசூலிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கும்.

வரி ஏய்ப்பு செய்துவிட்டு தலைமறைவாக இருப்போரை கண்டுபிடிக்க, தனியார் ஏஜன்சிகளை பயன்படுத்துவது மற்றும் பினாமி பெயரில் உள்ள சொத்துக்களை கண்டுபிடிப்பது தொடர்பாகவும் ஆய்வு செய்து, இந்த குழுவினர் பரிந்துரைகளை வழங்குவர்.நிதி உளவுப் பிரிவு மற்றும் வருமான வரித்துறை இயக்குனரகத்திற்கு கிடைத்துள்ள தகவல்கள் அடிப்படையில், நிலுவையில் உள்ள வரி பாக்கிகளை வசூலிக்க, என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம்; தொடர்ச்சியாக வரி செலுத்தாமல் ஏய்ப்போரின் பெயர்களை பகிரங்கமாக பொதுமக்களுக்கு தெரியும் வகையில் எப்படி வெளியிடலாம்; வரி ஏய்ப்போர் பற்றி தகவல் கொடுப்போருக்கு சன்மானம் வழங்கும் திட்டத்தை அறிவிக்கலாமா போன்றவை தொடர்பாகவும் ஆலோசனைகளை வழங்கும். இந்த கமிட்டி இரண்டு மாதத்திற்குள் தன் அறிக்கையை சமர்ப்பிக்கும்.

பதிவு செய்தது ErodeTimes on 6/09/2011 08:11:00 AM. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0
Sakthivel

0 கருத்துகள் for வரி ஏய்ப்போர் பெயர் வெளியிடப்படும்?ஆலோசனை அளிக்க புதிய குழு

உங்கள் கருத்துரைகளை விட்டுச் செல்லுங்கள்


FLICKR PHOTO STREAM

2010 Erodetimes.in. All Rights Reserved. - Powered by w2h