Ads

கனிமொழி ஜாமீன் வழக்கு விசாரணை மேற்கொண்டு வந்த நீதிபதிகள் திடீர் விலகல்


எதிர்வரும் 20ம் திகதி கனிமொழி மீதான ஜாமீன் மனு விசாரணை சுப்ரீம் நீதிமன்றிற்கு வரவுள்ள நிலையில், இவ்வழக்கு விசாரணையை மேற்கொள்ளும் பொறுப்பிலிருந்து நீதிபதிகள் சதாசிவம், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

இவ்விருவரும், தம்மை விலக அனுமதிக்குமாறு தலைமை நீதிபதி எஸ்.எச்.பாடியாவிடமும், கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்விலகலுக்கான காரணம் உடனடியாக தெரியவராத போதும், ஏதாவது நிர்ப்பந்தங்கள் கொடுக்கப்பட்டு அதனை ஏற்றுக்கொள்ள முடியாமலோ அல்லது பிணை மனு மீது தீர்ப்பளிப்பதில் மற்ற நீதிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவோ இந்த விலகல் நடந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் சிறப்பு அமர்வாக அடுத்தகட்ட ஜாமின் விசாரணையை மேற்கொள்ளவுள்ளனர்.

இதேவேளை 2ஜி ஸ்பெக்ரம் வழக்கில் சிக்கியிருக்கும் கனிமொழி எம்.பி மற்றும் கலைஞர் டிவி இயக்குனர் சரத்குமார் இருவருக்கும் எக்காரணம் கொண்டும் ஜாமின் கொடுக்க கூடாது என சி.பி.ஐ தொடர்ந்து அழுத்தமாக வலியுறுத்தி வருகிறது.

2ஜி ஸ்பெக்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, கலைனஞர் டிவிக்கு வழங்கப்பட்ட 214 கோடி ரூபாய் லஞ்ச பணம் தான். இது கடனாக பெறப்பட்டது அல்ல. கனிமொழியும், சரத்குமாரும் இதில் முக்கிய சதியாளர்கள். 2ஜி ஊழல் வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சுப்ரீம் நீதிமன்றம் இவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது. இவர்களை விடுவித்தாக் சாட்சிகளை கலைத்துவிடுவதுடன், ஆதாரங்களையும் அழித்து விடுவர் என நேற்று உச்ச நீதிமன்றில் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பதிவு செய்தது ErodeTimes on 6/18/2011 09:12:00 AM. Filed under , , , . You can follow any responses to this entry through the RSS 2.0
Sakthivel

0 கருத்துகள் for கனிமொழி ஜாமீன் வழக்கு விசாரணை மேற்கொண்டு வந்த நீதிபதிகள் திடீர் விலகல்

உங்கள் கருத்துரைகளை விட்டுச் செல்லுங்கள்


FLICKR PHOTO STREAM

2010 Erodetimes.in. All Rights Reserved. - Powered by w2h