கிளப்பில் சூதாட்டம்: நடிகர் ரவிதேஜா தந்தை கைது
cinema 5/11/2011 05:21:00 PM
பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜா. இவரது சகோதரர்கள் ரகுபாபு, பரத் ஆகியோர் போதை பொருள் விற்றதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். தற்போது ரவிதேஜாவின் தந்தையும் சூதாட்டம் ஆடியதாக கைதாகியுள்ளார்.
இவரது பெயர் பூபதி ராஜூ. கிளப்பில் பூபதி ராஜூவும், மேலும் சிலரும் சூதாட்டம் ஆடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையொட்டி போலீசார் கிளப்பை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர். அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த பூபதிராஜூவை கைது செய்தனர். அவருடன் மேலும் பலரும் கைதானார்கள்.
சூதாட்டத்துக்காக வைத்திருந்த ரூ.38 ஆயிரத்து 350 ரொக்கத்தையும் கைப்பற்றினார்கள்.
இதுபற்றி போலீசார் உதவி கமிஷன் வாசுசேனா கூறும்போது சூதாட்டத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம். அதை மீறி கிளப்பில் ரகசிய சூதாட்டம் ஆடிய பூபதி ராஜூ உள்பட 46 பேரை கைது செய்துள்ளோம் என்றார்.