Ads

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் 2011




ஏ ஆர் பாலகிருஷ்ண ரெட்டி

இந்த ஆண்டு குருபெயர்ச்சி மே மாதம் 8ஆம் தேதி; ராகு-கேது மே மாதம் 16ஆம் தேதி; சனி டிசம்பர் மாதம் 10ஆம் தேதி; இந்த மூன்று ராஜ கிரகங்கள் இந்த ஆண்டு இடமாற்றம் ஏற்படுகிறது. அது மட்டுமல்ல; மாதாமாதம் மாற்றம் அடைகின்ற புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய் ஆகியவற்றில் மாற்றங்களையும் கணக்கில் கொண்டு இந்த தமிழ்ப் புத்தாண்டு பலன்களை இங்கே அளித்திருக்கிறோம்.
இந்த தமிழ் புத்தாண்டு நல்ல ஆண்டாக மலர எங்களது வாழ்த்துகள்.
மேஷம்
பல நல்ல சுப திருப்பங்களைத் தரும் வருடம் இது. பணியில் தொய்வு இருந்தாலும், மே மாதத்திற்குப் பிறகு செய்யும் தொழில் இட மாறுதல், மன நிம்மதி, வருமானம் அதிகம் என சுபச் செய்திகள் காத்துகிட்டு இருக்கு. ராகு-கேது பெயர்ச்சியும் இருக்கறதனால உங்க வாக்கில் இனிமை வேணும். பயணத்தில் கவனமும், அடுத்தவர்களை பற்றி கவலைப்படாமல் உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தை பற்றி சிந்தனையோடு செயல்படுங்கள்.  

மொத்தத்தில் இது பல திருப்பங்களை தரும் வருடம்.
ரிஷபம்
இந்த ஆண்டு பிறப்பே சில நல்ல விஷயங்கள் அரங்கேறும். உங்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்கள், பழைய வாகனங்களை புதுப்பித்தல், வீடு, நிலம் சம்பந்த முதலீடு அப்படீன்னு சுப செலவுகள் ஏற்படும். குறிப்பா டிசம்பர் மாதத்திற்கு மேல் செலவுகள் இருக்கு. உடல் நலத்தில் கொஞ்சம் அக்கறை வேணும். குழந்தைகள் மேற்படிப்பு செலவும், அவர்கள் மீது அக்கறையும் அதிகம் தேவைப்படும்.  

மொத்தத்தில் வரவுடன் கூடிய ஆண்டு.
மிதுனம்
புதிய இடமாற்றம், மன நிம்மதி, அதிக வருமானம் இவைகள் எல்லாம் வந்து உங்க மனசு தெம்பா இருக்கும். எல்லோருமே உங்களை ஆச்சர்யமா பார்ப்பாங்க. சொந்த வீடு இல்லாதவங்க இந்த ஆண்டு வீடு, மனை ஏற்படும். முதலீடு செய்ய நல்ல ஆண்டு. மே மாதத்திற்குப் பிறகு கோவில் குளம்னு சேத்ராடனம் போயிட்டு வருவீங்க. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மொத்தத்தில் குதூகலமான ஆண்டு.
கடகம்
தொழில் செய்யற இடத்தில் அதிகமா பேசாம நாம உண்டு; நம்ம தொழில் உண்டுன்னு இருங்க. ஜுன் மாதத்தில் நல்ல சந்தர்ப்பங்கள் உங்களை தேடிவரும். உபயோகப்படுத்திகங்க. மனசில டென்ஷன் இருக்கும். குருவுக்கு வியாழக்கிழமை தோறும் நெய் விளக்கு போட்டு வாங்க. சுப செலவா மாத்திக்கிட்டா வருடக் கடைசில மிகப் பெரிய லாபம் ஏற்படும்.

மொத்தத்தில் மகிழ்ச்சியான ஆண்டு.
சிம்மம்
இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான ஆண்டாக அதுவும் குரு பெயர்ச்சிக்கு பிறகு, ஒருசில வருடங்களாக இருந்து வந்த தடங்கல்கள், தடைகள் விலகும். நீண்ட நாளைய நட்பு சொந்த பந்தங்கள் சேரும். பாத சனி இந்த ஆண்டு விலகுவதே மிகப் பெரிய சிறப்புச் செய்தி உங்களுக்கு.

மொத்தத்தில் வாழ்க வளமுடன்.
கன்னி
பயணம், முதலீடு இதில் கொஞ்சம் கவனமா இருங்க. தொழில் செய்யுற இடத்தில் வார்த்தைகளில் கவனம் வேணும். டிசம்பர் மாதம் ஜென்ம சனி விலகுவது உடல் நிலை தேறும். மருத்துவச் செலவு குறையும். மொத்த்தில் சுமாரான வருடமாக இருந்தாலும் சுகமான ஆண்டு.

துலாம்
உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் ஆண்டு. அவர்களுக்கு நகை, பணம், பட்டு, வாகனம் எல்லாம் வாங்கித் தருவீங்க. அப்ப வருமானம் வரும்னு தெரியுது இல்லையா..! உங்கள் டிசம்பர் மாதத்திலிருந்து ஜென்ம சனி. அலைச்சல் திரிச்சல் இருக்கும். உடல் நலத்தில் கவனமாக இருக்கவேண்டும். சரியான வேலையில் சாப்பிட்டு ஓய்வுகள் எடுத்தாலே போதும்.

மொத்தத்தில் நன்மைகள் சேரும் ஆண்டு.
விருச்சிகம்
டென்ஷன் வேண்டாம். எதையும் சீர்தூக்கி பார்த்து நிதானமாக செய்ங்க. உடல்நிலைல அக்கறை வேணும். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏழரை சனி ஆரம்பம். மே மாதம் குரு ருணரோகஸ்தானத்திற்கு வருவதால், சுப காரியங்களுக்காக கடன் ஏற்படுத். வாக்கு ஸ்தானம் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

மொத்தத்தில் இந்த ஆண்டு மங்கல ஆண்டு.
தனுசு
இந்த ஆண்டு குரு ஐந்தாம் இடமும், ராகு 12ஆம் இடமும், சனி 11ஆம் இடமும் இப்படி சாதகமாக கிரகங்கள் அமைந்து இந்த ஆண்டு மகிழ்ச்சியாக மலரப் போகிறது. செய்கிற தொழிலில் நன்மையும், பாராட்டும், அரிய லாபமும் கிடைக்கும். பதவி உயர்வும் உண்டு. புதிய தொழில் தொடங்கலாம். வருமானத்தை முறைப்படுத்தி, வீடு, நிலம், வாகனம்னு வாங்கிப்போடுங்க. விரயச் செயலவை தவிர்த்திடுங்க.

மொத்தத்தில் இது நல்ல ஆண்டு.
மகரம்
வேறு மொழி இனத்தவரால் அதிக லாபமும், மன நிம்மதியும்ஏற்படும். வெளிநாட்டுக்கு போய்வர வாய்ப்பு வரும். வேலையில் முன்னேற்றம் உண்டு. இதுவரையில் இருந்து வரும் மருத்துவ செலவு குறையும். தொழிலில் நண்பர்கள் உதவுவார்கள்.

மொத்தத்தில் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஆண்டு.
கும்பம்
நிதானமா பொறுமையா செயல்படுங்க. கஷ்டப்பட்டு உழைப்பீங்க. இதுவரை பலன் தரலையேன்னு நினைக்காதீங்க. காலம் மாறுது. டிசம்பர் மாதம் சனி மாறுவதே உங்களுக்குத் தீர்வு. செப்டம்பர்-அக்டோ பர்ல உங்களுக்கே அதிக வருவமானம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கு.

மொத்தத்தில் ஒளிமயமான ஆண்டு.
மீனம்
என்ன எல்லாம் வாங்கனும், எப்படியெல்லாம் வாங்கனும். முறையா வழிப்படுத்தி வருமானத்தை பெருக்குங்க. சரியான படி முதலீடு செஞ்சா லாபத்தை இரட்டிப்பாக்கலாம். வெளிநாடு வெளிவட்டாரப் பழக்கம் கைகொடுக்கும். உடல் நிலையில் சரியான நேரத்தில் சாப்பிட்டு வர வயிறு பிரச்சினை தீரும்.

மொத்தத்தில் இது சுப ஆண்டு.

நன்றி:சென்னை ஆன்லைன்.

பதிவு செய்தது ErodeTimes on 5/11/2011 05:12:00 PM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0
Sakthivel

0 கருத்துகள் for தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் 2011

உங்கள் கருத்துரைகளை விட்டுச் செல்லுங்கள்


FLICKR PHOTO STREAM

2010 Erodetimes.in. All Rights Reserved. - Powered by w2h